Whats is 3D Print?
3D Print என்பது நமக்கு தேவையான வடிவமைப்பு உள்ள ஒரு பொருளை கணினியில் வரைந்து அவற்றை முப்பெரிமாண பொருளாக நம் உருவாக்கலாம் அவற்றிற்கு 3d Printer பயன்படுகிறது.
USAGE:
தற்பொழுது 3d பிரிண்ட் மருத்துவத்துறையிலும் பயன்பட்டு வருகிறது. ஏற்கனவே கழுகின் உடைந்த மூக்கு 3டி பிரிண்டால் உருவாக்கம் செய்து அவற்றிற்கு பொறுத்திள்ளனர். மேலும் கால் இழந்தவர்களுக்கு கால் மற்றும் கை போன்றவர்களும் போன்றவை உருவாக்கி 3டி பிரிண்டில் உருவாக்கி பயன்படுத்தி உள்ளனர்.
தற்பொழுது உணவு துறையிலும் பயன்படுத்தி வருகின்றனர். உணவு துறையில் நமக்கு தேவையான வடிவங்களில் நமது உணவை உருவாக்கி தருகின்றனர்.
கட்டிடத் தொழிலில் தற்பொழுது குறைந்த அளவு நேரம் மற்றும் பணத்தைக் கொண்டு 3d பிரிண்ட் பயன்படுத்தி படுகிறது.
பரிசுப் பொருட்கள் உருவாக்கம் மற்றும் கலைத்துறையில் 3டி பிரிண்ட் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
Material:
3d பிரிண்டரில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் Filament என்று அழைப்பார்கள்
இவற்றிற்கு அதிகமாக பயன்படுத்தப்படும் ( Material) பொருள் PLA என்ற பிளாஸ்டிக் பயன்படுத்துகிறோம்.
மேலும் கீழே குறிப்பிட்டுள்ள பிளாஸ்டிக் வகைகள் பயன்படுத்தலாம் அதற்கு ஏற்ற 3d பிரிண்டரை நம் வைத்திருக்க வேண்டும்.
- Abs Material –
- PETG
- Nylon
- TPU
தற்பொழுது மெட்டல் வகை 3d பிரிண்ட் உருவாக்கப்படுகிறது.
Working Method:
இதை செயல்படும் விதம் எளிதாக கூற வேண்டும் என்றால் சிறிய சிறிய அளவிலாக உள்ள பிளாஸ்டிக் வயரை நம் 3D பிரிண்டர் இயந்திரத்தை பயன்படுத்தி சூடு படுத்துவதன் மூலம் அவை உருகி வெளிவருகிறது. அவ்வாறு சிறிய அளவில் வெளிவரும் பிளாஸ்டிக்கை நமக்கு வேண்டும் இடத்தில் வைத்து நகர்த்திக் கொண்டே செல்லும் பொழுது அவை எளிதில் உருகிய நிலையில் இருந்து கடினமான பிளாஸ்டிக் நிலைக்கு மாறிவிடுகிறது. இந்த பிளாஸ்டிக் உருகி வைக்கும் இடத்தை நமது பொருளின் வடிவத்திற்கு ஏற்ப பிளாஸ்டிக் உருக்கி தள்ளும் Header கம்ப்யூட்டர் Program செய்வதன் மூலம் மூலம் நகர்த்தி நம் வரைய செய்யலாம். அவ்வாறு வரைய செய்யும் பொழுது நமக்கு தேவையான வடிவம் கிடைக்கிறது. அதேபோன்று சிறிதளவு மேலே உயர்த்தி அவற்றின் மேலே தற்பொழுது நமக்கு தேவைப்படும் வடிவத்தை வரைந்தால் அதன் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்குவதன் மூலம் நமக்கு வேண்டிய வடிவிலான பொருள் முப்பரிமாணத்தில் கிடைக்கும். இவ்வாறாக நமக்கு தேவையான வடிவத்தை கம்ப்யூட்டரில் டிசைன் செய்து அவற்றை Gcode ஆக மாற்றி அமைத்து நம் ஒன்றன் மேல் ஒன்றாக அந்த வடிவத்தை அடுக்கி வருவதால் நமக்கு தேவையான முப்பரிமான பொருள் கிடைக்கின்றது.
Design Software:
நீங்கள் திருடி பிரிண்ட் செய்வதற்கு முதலில் அவற்றிற்கு தேவையான வடிவத்தை வடிவமைத்துக் கொள்வதற்கு தேவையான டிசைன் சாப்ட்வேர் உங்களுக்கு கற்றுக் கொள்ள வேண்டும். அவை இலவசமாகவும் மற்றும் பணம் செலுத்தியும் நமக்கு கிடைக்கும். அவ்வாறாக நமக்கு பயனுள்ளதாக இருக்கும் சாப்ட்வேர் தலைப்பு கீழே கொடுத்துள்ளேன்.
Free Design Software:
நம் 3டி பிரிண்ட் செய்வதற்கு மூன்று வகையான டிசைன் சாப்ட்வேர்கள் நமக்கு பயன்படுகிறது ஒன்று CAD, Design, Sculpt வகையை சேர்ந்த சாஃப்ட் அவர்கள் நமக்கு இலவசமாகவும் கிடைக்கின்றது மேலும் வீடு போன்று பெரிய வகை டிசைன் செய்வதற்கு ஸ்கெட்ச் போன்ற சாஃப்ட்வேர் கட்டணம் செலுத்தியும் அதிக திறன் உள்ள சாஃப்ட்வேர்களை நம் பெற்றுக் கொள்ளலாம்.
- Blender
- Mattercontrols
- Thinkercad
- Fusion 360
- MeshMixer
Blender இவற்றைக் கொண்டு நம் CAD வகை போன்று Design உருவாக்கலாம் மற்றும் Solid Object கொண்டும் டிசைன் உருவாக்கலாம் மேலும் Sculpt , அனிமேஷன் போன்ற பல வசதிகள் இந்த இலவச சாஃப்ட்வேரில் உள்ளது.
இந்த இலவச சாஃப்ட்வேரை உங்களது அனைத்து விதமான 3d டிசைன் செய்வது அதற்கான தேவைகளை பூர்த்தி செய்யும்
MatterControl: இந்த சாப்ட்வேர் நமக்கு இலவசமாகவும் மற்றும் பணம் செலுத்தி அதிக வசதிகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
இலவசமாகவும் மிகவும் எளிதாகவும் ஒரு 3d டிசைனை உருவாக்குவதற்கு இந்த சாப்ட்வேர் மிகவும் பயனுள்ளதாகவும் எளிதாகவும் இருக்கும் இவற்றைக் கொண்டு ஒரு Template உருவாக்கி வைத்துக் கொண்டால் திரும்பத் திரும்ப நமக்கு தேவைப்படும் டிசைன்களை அவற்றில் உள்ள அளவுகளை மாற்றுவதன் மூலம் எழுதி உருவாக்கிக் கொள்ளலாம் .
Thinkercad: இணையத்தில் எளிதாக மற்றும் இலவசமாக பயன்படுத்தப்படும் 3D டிசைன் வெப்சைட். மிகவும் எளிதாகவும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் உள்ள ஒரு இலவச இணையதள 3d டிசைன் வெப்சைட்.
இவை இணையதளத்தில் இயங்குவதால் மிகவும் குறைவான திறன் கொண்ட கணினியில் எளிதாக பயன்படுத்தலாம் எங்கு வேண்டுமென்றால் பயன்படுத்தலாம் இவற்றிற்கு இணையதளம் தேவை.
Basic Tutourial
நீங்கள் எளிதாக கற்றுக் கொள்வதற்காக வீடியோவாக உருவாக்கி வைத்துள்ளேன் இவற்றை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இவற்றின் நீங்கள் எளிதாக 3d டிசைன் உருவாக்கம் செய்து 3d பிரிண்ட் செய்து கொள்ளலாம்.
Fusion360: இதை கட்டம் செலுத்தி தான் பயன்படுத்த முடியும் ஆனால் கல்வி என்று இலவசமாக மாணவர்களுக்கு ஒரு வருடம் வழங்கப்படும். இந்த சாப்ட்வேரில் துல்லியமான அளவு 3டி டிசைன் செய்வதற்கு இந்த சாப்ட்வேர் மிகவும் பயனுள்ளதாகவும் எளிதாகவும் இருக்கும் இவை இன்ஜினியரிங் டிசைனில் கற்று தரும் ஒரு பாடமாக உள்ளது.
Meshmixer: இவை சிலை வடித்தல் போன்று திசை உருவாக்குவதற்கு வித்தியாசமான ஒரு இலவச சாப்ட்வேர். இந்த இலவச சாப்ட்வேரை கொண்டு நீங்கள் Patrtern என்னும் அமைப்பை எளிதாக உருவாக்கலாம் மேலும் ஏற்கனவே டிசைன் செய்த டிசைன் சரியாக வரவில்லை என்றால் அவற்றை ரிப்பேர் செய்யவும் இவற்றை பயன்படுத்தலாம்.
Paid:
Design To Gcode:
நம் உருவாக்கிய Design னை 3D பிரிண்டர்க்கு ஏற்றவாறு நம் மாற்றியமைக்க மேலும் அவை வெற்றிகரமாக Support கொடுத்து பிரின்ட் செய்வதற்கு Slicing சாப்ட்வேர் பயன்படுகிறது. இவை நமக்கு டிசைன் ஜி கோடு எனும் வடிவத்தில் மாற்றி தருவதை நாம் 3D Printer ல் கொடுத்தோம் என்றால் நமக்கு 3D Print வேலை செய்ய தொடங்கி விடும்.
அனைவரும் பொதுவாக இலவசமாக கிடைக்கக்கூடிய Cura என்னும் 3d Slicer சாஃப்ட்வேர் பயன்படுத்துவார்கள் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3D Print செய்வோம் முன் கவனிக்க வேண்டியவை:
- சர் சாஃப்ட்வேரில் லேயர் மோட் என்பதே ஆன் செய்து முழுவதும் ஆக ஒவ்வொரு லேயராக செக் செய்ய வேண்டும் டிசைனுக்கு சப்போர்ட் தேவை என்றால் சப்போர்ட் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் அதை பிரிண்ட் செய்யும் பொழுது முழுமை அடையாது.
- லேயர் மோடில் முழுமையாக முதல் லேயர் வரையிலும் நீங்கள் சென்று பார்க்க வேண்டும் அவ்வாறு பார்க்கும் பொழுது நம்முடைய 3 டி டிசைன் கீழே உள்ள பெட்டில் அதிக பரப்பளவில் தொட்டு (touch) உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு பிரிண்ட் கொடுக்க வேண்டும்.
- உங்களுடைய 3d டிசைனிங் அளவைப் பொறுத்து Layer hight -ஐ மாற்றிக் கொள்ளலாம் சிறிய அளவு டிசைன் Or Photo ( Lithophane ) வகை என்றால் 0.16 கொடுக்கலாம் , பெரிய அளவுள்ள Solid ஆப்ஜெக்ட் என்றால் நீங்கள் 0.2 கொடுக்கலாம்.
- நீங்கள் பிரிண்ட் செய்யும் முன்பாக Bed Level சரி செய்து கொள்ளவும் Bed Level பற்றி வீடியோ கொடுத்துள்ளேன் தற்பொழுது வரும் 3டி பிரிண்டரில் Auto Bedlevel என்னும் வசதி உள்ளது அவற்றை பயன்படுத்தி பார்க்கவும்.
எடுத்துக்காட்டுக்கு சொல்ல வேண்டும் என்றால் ஒரு பேப்பரை ஒன்றின் மேல் ஒன்றாக அடிக்கினால் நமக்கு சதுர வடிவ ஒரு புக் நோட் கிடைக்கின்றது. நம் சதுரமான பேப்பரை அடுக்குவதால் சதுரமான முப்பரிமான புக் வடிவம் கிடைக்கிறது அதுவே வேற வடிவத்தில் நமக்கு ஏற்ப வடிவமுள்ள பேப்பரை அடுக்கி வந்தால் நமக்கும் அதே போன்று பொருள் கிடைக்கும் இது ஒரு எடுத்துக்காட்டு தான் இதே நிகழ்வு தான் நம் பிளாஸ்டிக்கை உருக்கி ஒவ்வொரு வடிவமாக ஒன்றின் மேல் ஒன்றாக அடிக்கி நமக்கு தேவையான பொருளை உருவாக்குகிறோம் . நான் தற்பொழுது மிகவும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கூறியுள்ளேன். மேலும் புரிந்து கொள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பராமரிப்பு – Maintenance :
- நீங்கள் வாரம் ஒரு முறை 3டி பிரிண்ட் இயந்திரத்தை செய்ய வேண்டும் மேலும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஃபேன் உள்ள பகுதியை டிரஸ் கொண்டு தூசை அகற்ற வேண்டும்.
- இரண்டு அல்லது மூன்று பிரிண்ட் செய்த பின்பு Nozzle அவற்றிற்கான கொடுத்திருக்கும் சிறிய அளவுள்ள கம்பியை பயன்படுத்தி இயந்திர Nozzle 200 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இருக்குமாறு வைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
விலை – Price:
3d பிரிண்டர் விலை 12000 ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது நீங்கள் புதிதாக வாங்கி கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் என்டர் த்ரீ எனும் வகை 3d பிரிண்டரை வாங்கி கற்றுக்கொண்டு பின்பு உங்களுக்கு அவற்றின் மீது ஆர்வம் மற்றும் பணம் இருந்தால் அதற்கு அடுத்து 3டி பிரிண்டரில் அதிக வசதிகளுடன் இருக்கும் உங்களது பண வசதிக்கு ஏற்றமாறு நீங்கள் வாங்கலாம்.
3டி பிரிண்ட் தொடர்பான தகவல்களுக்கு நமது பக்கத்தை தொடர்ந்து படியுங்கள் மேலும் நமது youtube சேனலை பாருங்கள் நன்றி வணக்கம்