Intro:

தற்பொழுது அதிகமாக கடைகளில் மற்றும் ஆபீஸ்களில் இது போன்ற 3d LED Name board பார்த்திருப்பீர்கள். மிகவும் அழகாகவும் அந்த ஆபீஸ் மற்றும் இடத்தை சில வினாடி நம் பார்த்து ரசிக்க வைக்கும் அளவிற்கு இவை தற்பொழுது ட்ரெண்டிங்காக உள்ளது.

இந்த LED Name Board ல் உங்களது போட்டோக்கள் வைத்து கீழே உள்ளதை போன்று நம் டிசைன் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு இன்னும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். மேலும் அதற்கென்று தனியாக சாஃப்ட்வேர் உள்ளது. அவற்றைப் பற்றி 3D Print Design Course பக்கங்களில் வெளியிட்டுள்ளேன், Course வாங்கியவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். வாங்காதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் ஒருமுறை 3d print design website பாருங்க கீழே உள்ளது போன்று போட்டோக்கள் வைத்து Name போடு கிப்ட் செய்வது பற்றி அவற்றில் கூறியுள்ளேன். மிகவும் எளிதாக தற்பொழுது நேம் போர்டு செய்வதை பற்றி அதுவும் இணையத்தில் உள்ள சாப்ட்வேரை வைத்து நீங்கள் இலவசமாக உருவாக்கிக் கொள்ளலாம்.

oppo_0

நீங்கள் 3d பிரிண்ட் பிசினஸ் செய்கிறீர்கள் என்றால் இந்த Name Board எவ்வாறு உருவாக்குவது என்பதை பற்றி இந்த பதிவு உங்களுக்கு கூறுகிறது.

நீங்கள் அதிகமாக பயன்படுத்தும் எந்த ஒரு போட்டோ எடிட்டிங் ஆப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இலவசமாகவும் அனைத்து கணினி வேலை செய்யும் வகையில் உள்ள ஒரு வெப்சைட்டில் 3d text நம் உருவாக்கிக் கொள்ளலாம்.

எதற்காக நமக்கு போட்டோ டிசைனிங் சாப்ட்வேர் தேவைப்படுகிறது என்றால் நாம் பயன்படுத்தும் 3டி டெக்ஸ் உருவாக்கும் சாஃப்ட்வேரில் நான்கு வகையான font டிசைன் மட்டுமே உள்ளது. ஆகையால் நமக்கு பிடித்த ஃபான்ட் டிசைனிங் நம் போட்டோஷாப் அல்லது கேன்வா போன்ற போட்டோ எடிட்டிங் சாப்ட்வேரில் உருவாக்கிக் கொள்ள வேண்டும் அவற்றை எந்த பார்மெட்டில் உருவாக்க வேண்டும் என்பதை பின் வருவதற்கு பார்க்கலாம்

  1. Font Design
  2. Outline Design
  3. innerline Design
  4. Lid Design
  5. Export

Font Design

Thinkercad software நான்கு வகையான font டிசைன் மட்டுமே உள்ளதால் நம் வேறு ஒரு போட்டோ எடிட்டிங் ஆப் பயன்படுத்துகிறோம். அவற்றை Black and White color டிசைன் செய்ய வேண்டும். மேலும் நமக்கு பிடித்த ஸ்டைலிலும் எவ்வளவு எழுத்து Bold அளவு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

  1. Software Name
    • நான் கீழே குறிப்பிட்டுள்ள இரண்டு போட்டோ எடிட்டிங் சாப்ட்வேரும் இணையத்தில் நீங்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

Photo Export Format – SVG ( Transparrent Formate)

நீங்கள் இலவசமாக போட்டோ டிசைனிங் ஆப் மற்றும் சாப்ட்வேர் இணையத்தில் பயன்படுத்த வேண்டும் என்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ள Phototpea மற்றும் Canva எனும் இலவச போட்டோ எடிட்டிங் சாப்ட்வேரை நீங்கள் பயன்படுத்தலாம். இதை மிகவும் எளிதாகவும் போட்டோஷாப் போன்றும் இருக்கும். கேன்வா புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு எளிதாக இருக்கும்.

Thinkercad இணையதளம் நம் import செய்யும் Photo SVG என்னும் formate இருந்தால்தான் அவை அவற்றை Import செய்து நம் அவற்றை 3d மாடலாக Convert செய்ய முடியும். ஆகையால் போட்டோ எக்ஸ்போர்ட் செய்யும்பொழுது svg எனும் format செலக்ட் செய்து export செய்யுங்கள்.

3D Software:

Website Name : ThinkerCAD

Thinkercad சாஃப்ட்வேர் ஐ பயன்படுத்தி நீங்கள் இணையத்தில் 3d டிசைன் செய்து கொள்ளலாம். இவை எளிதாகவும் மற்றும் இலவசமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் அனைத்து விதமான pc மற்றும் லேப்டாப்பிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றில் நான்கு வகையான எழுத்து வடிவம் மட்டுமே உள்ளதால் நம் போட்டோவில் தேவையான நீர் அல்லது லோகோவை கருப்பு வெள்ளை வடிவத்தில் டிசைன் செய்து svg ஃபார்மேட்டில் இவற்றில் import செய்தால் நம் அவற்றை 3d டிசைனாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம் இந்த இணையதளத்திற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நம் கருப்பு வெள்ளை நிறத்தில் கொடுக்கப்பட்டதை பொறுத்து அதை 3d டிசைனாக கன்வெர்ட் ஆகி இருக்கும். அதாவது அந்த கலரில் உள்ள பகுதி மட்டும் thickness மாறி Extrude ஆகி இருக்கும்.

Outline Design:

நமக்கு தேவையான வடிவம் மற்றும் எழுத்துக்களின் அவற்றுடைய outline 3d வடிவத்தில் தேவை. அவற்றை உருவாக்குவதற்கான வசதி thinkercad சாப்ட்வேரில் தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது. நான் போட்டோவில் காட்டியுள்ள அந்த fillmode – outline ஐகானை கிளிக் செய்தால் நமக்கு அவுட் லைன் கிடைக்கும். அதற்கு முன்பு நம் import செய்த மற்றும் 3 டி யாக மாற்றி வைத்த 3டி மாடலை duplicate செய்து கொள்ளுங்கள். duplicate செய்து கொள்வதற்கு Ctrl+D கிளிக் செய்தீர்கள் என்றால் டூப்ளிகேட் ஆகிவிடும். அல்லது அவகளுக்கு என்று கொடுக்கப்பட்டிருக்கும் பட்டனை கிளிக் செய்தால் மற்றொன்று duplicate ஆக கிடைக்கும் இவற்றை தான் நீங்கள் அவுட்லைனுக்கு பயன்படுத்த வேண்டும்.

innerline Design:

தற்பொழுது மீண்டும் ஒரு டூப்ளிகேட் செய்து அவற்றில் fill mode என்னும் வசதியின் inner line என்னும் வசதியை செலக்ட் செய்தால் நமக்கு தற்பொழுது inner line என்னும் வசதியும் கிடைக்கும். இவற்றை மாற்றியமைத்து நம் இவருக்கு தேவையான மூடி மற்றும் அடிப்பகுதி போன்றவர்கள் எளிதாக டிசைன் செய்து கொள்ளலாம்.

Lid Design:

அப்படி இதற்கான மூடியை டிசைன் செய்வதற்கு மீண்டும் ஒரு டூப்ளிகேட் செய்து கொள்ள வேண்டும். அவற்றில் மேலும் இன்னொரு டூப்ளிகேட் செய்து தற்பொழுது அங்கே அவுட்லைன் கொடுத்து இருந்தால் இங்கே inner line கொடுத்து அவற்றுக்கான முடியை உருவாக்க வேண்டும். அல்லது அங்கு innerline கொடுத்திருக்கிறீர்கள் என்றால் இங்கே அவுட்டர் லைன் கொடுத்து அவற்றிற்கான heightபோன்றவற்றை டிசைன் செய்து கொள்ளுங்கள்.

Export:

Formate: Stl, Obj

பொதுவாக நாம் 3d பிரிண்ட் செய்வதற்கு பயன்படுத்தப்படும் 3d மாடல் formate என்னவென்றால் stl மற்றும் obj ஆப்ஜெக்ட் போன்றவற்றை slicer பயன்படுத்தி நம் gcode மாற்றுவோம். ஆகையால் இந்த thinkercad software உங்களுக்கு தேவையானவற்றை செலக்ட் செய்து எக்ஸ்போர்ட் டு செலெக்டட் ஆப்ஜெக்ட் (export to selected object ) என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம். அவற்றை நீங்கள் தனித்தனியாகவும் எக்ஸ்போர்ட் செய்யும் வசதி உள்ளது. அதாவது தேவைப்படும் ஆப்ஜெக்டை தனியாக செலக்ட் செய்து செலக்ட் ஆப்ஜெக்ட் எக்ஸ்போர்ட் (export to selected object ) என்னும் வசதியை கிளிக் செய்து எக்ஸ்போர்ட் செய்து கொள்ளுங்கள். தற்பொழுது நீங்கள் stl object பயன்படுத்தி அவற்றை ஜீ கோடாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம். நான் க்யூரா என்னும் இலவச slicer பயன்படுத்துகிறேன். நீங்களும் அவற்றை பயன்படுத்தலாம் எளிதாகவும் மற்றும் இலவசமாகும்.

நன்றி வணக்கம்.

நீங்கள் 3d பிரிண்ட் பிசினஸ் செய்கிறீர்கள், உங்களது டிசைன் வேலையை எளிதாகவும் மற்றும் design தெரிந்து கொள்ளவும். ஒரு முறை நமது 3டி பிரிண்ட் டிசைன் பக்கத்தை பார்க்கவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top