Intro:

தற்பொழுது Premalu என்ற திரைப்படத்தில் வருவது போன்று முயல் பொம்மை லைட் எரிவது போன்ற Gifts மிகவும் பிரபலம் அவற்றை நம் 3d பிரிண்ட் இல் எவ்வாறு உருவாக்குவது என்றும் மேலும் அதற்கான டிசைன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

How To design?

முயல் உருவம் கொண்ட 3d டிசைன் File இன்டர்நெட்டில் டவுன்லோட் செய்து கொண்டேன் அவற்றை உள்ளே LED Light பொருத்துவதற்கான அமைப்பை உருவாக்குவது எவ்வாறு என்றால் நீங்கள் நேரடியாக Cura என்னும் Slicer சாஃப்ட்வேரில் Infill அளவு 0 என்று கொடுத்தால் உள்ளே எந்த ஒரு ஆப்ஜெக்டும் காலியாக பிரிண்ட் செய்யப்படும்.

ஆனால் நான் டவுன்லோட் செய்த முயல் பொம்மை design file அவ்வளவு smooth தாக இல்லாத காரணத்தினால் Zbrush என்னும் சாப்ட்வேரில் Insert செய்து அவற்றில் LOw Poly அமைப்பின் இருந்து அதிக Resolution மற்றும் Smooth ஆக மாற்றும் சில setting மாற்றி அமைத்து வீடியோவில் தெரிவது போன்று மிக அழகான முயல் பொம்மை 3d டிசைன் File நமக்கு கிடைத்துவிட்டது.

நீங்கள் இவ்வாறு செய்யத் தேவையில்லை நான் அனைத்தையும் சரி செய்து உங்களுக்கு டிசைன் file லாக கீழே கொடுத்துள்ளேன். அவற்றை டவுன்லோட் செய்து நீங்கள் cura slicer ன் உங்களுக்கு ரெகுலராக எந்த செட்டிங் பயன்படுத்துவீர்களோ அந்த செட்டிங்கை தாராளமாக பயன்படுத்தலாம்.

Zbrush

zbrush சாஃப்ட்வேரில் Brush Tool பயன்படுத்தி நீங்கள் ஒரு புதிய வகை Design னை உருவாக்கலாம். மேலும் ஏற்கனவே உள்ள டிசைனை மாற்றி அமைப்பதற்கு மிகவும் பயனுள்ள சாஃப்ட்வேராக இருக்கும் இவற்றைக் கொண்டுதான் Low Poly ல் உள்ள முயல் பொம்மை டிசைன் பைலை நான் smooth க மாற்றி அமைத்துள்ளேன்.

நீங்க இந்த சாப்ட்வேரை டவுன்லோட் செய்வதற்கான இனிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் இந்த சாப்ட்வேர் பணம் செலுத்தி தான் நீங்கள் பயன்படுத்த முடியும்.

நீங்கள் நான் கொடுக்கப்பட்டுள்ள இந்த 3d Design File டவுன்லோட் செய்து நேரடியாக Cura என்னும் சாப்ட்வேர் கொண்டு பிரிண்ட் செய்து அவற்றில் நீங்கள்Moon Light க்கு பயன்படுத்தப்படும் டச் சென்சாரை லைட் பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் சவுண்ட் பேஸ்டு லைட் சேஞ்சிங் லைட் பயன்படுத்தலாம்.

3d Print செய்யப்பட்ட முயல் பொம்மையை கண் மற்றும் மூக்கு வாய் ஆகியவற்றில் நீங்கள் பெயிண்ட் செய்தீர்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும்

Design File Download Link:

நீங்கள் நேரடியாக Cura Sliceer ல் பயன்படுத்தக்கூடிய Design file கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

லைட் இல்லாத பொழுது முயல் பொம்மையின் புகைப்படம்

LED ?

நான் பயன்படுத்தியுள்ள Moon லைட்டுக்கு பயன்படுத்தப்படும் Touch சென்சார் லைட். இவற்றின் விலை 350 ரூபாய். இவை இல்லை என்றாலும் நீங்கள் பேட்டரியில் தினமும் பயன்படுத்தக்கூடிய, அருகில் electronic கடை இல் கிடைக்கக்கூடிய LED பயன்படுத்தலாம் ஆனால் அவை ஒரு கலர் மட்டும்தான் கிடைக்கும்.

Cura Setting

Layer Height – 0.2 mm

Infill – 0%

Support – No

இலவசமாக கிடைக்கக்கூடிய ஒரு 3டி பிரிண்ட் slicer இவற்றை பயன்படுத்தி நம் டிசைன் செய்து வைத்துள்ள design file இயந்திரத்திற்கு பயன்படுத்தக்கூடிய gcode என்னும் formate ல் மாற்றி அமைப்பதற்கு இந்த cura slicer உதவுகிறது. இவற்றை டவுன்லோட் செய்வதற்கு இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் பயன்படுத்தப்படும் 3d பிரிண்ட் slicer இதுதான்.

இவற்றைத் 3d பிரிண்டில் மேக் செய்யும் பொழுது எளிதாக உள்ள கலரை வெள்ளையாகவும், டார்க்காக உள்ள கண் மற்றும் காது போன்றவற்றை கருப்பு நிறத்திலும் பிரின்ட் செய்து ஒட்டி வைத்தால் இன்னும் வித்தியாசமாக இருந்திருக்கும். அவற்றை அடுத்த முறை முயற்சி செய்து உங்களுக்கு வீடியோவாக பதிவேற்றம் செய்கிறேன் ஆக நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.

Moon லைட்டிற்கு பயன்படுத்தப்படும் மூன்று கலர் மாற்றக்கூடிய டச் சென்சார் எல்இடி இவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது மஞ்சள் மற்றும் வெள்ளை நிற லைட் எரிவதை புகைப்படத்தில் நீங்கள் காணலாம்

How to Make LED:

இவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கும் LED லைட் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் நார்மலாக டச் செய்தால் ஆன் ஆஃப் செய்யக்கூடிய switch பயன்படுத்தி நீங்கள் ஒரு LED உருவாக்கலாம். இவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்கிக் கொள்ளவும்.

Required

  1. LED
  2. Touch Sensor – Buy
  3. Battery

ஆகியவற்றை பயன்படுத்தி எளிதான circuit கொண்டு நீங்கள் touch சென்சார் ஆன் ஆப் செய்து கொள்ளலாம். இதை பட்டன் ஆளாம் செய்வது விட சற்று வித்தியாசமாக இருப்பதால், உங்களுக்கு கிடைக்கவில்லை என்பதால், இதை முயற்சி செய்து பாருங்கள் என்று கூறுகிறேன்.

இந்த பொம்மையில் பயன்படுத்தப்படும் லைட் டச் சென்சார் இருப்பதைவிட சவுண்ட் பேசில் இருந்தால் மிகவும் அழகாக இருக்கும் இவற்றில் முயல் பொம்மை மட்டும் என்று வேறு சில பொம்மைகளும் கிடைக்கின்றது அவற்றையும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். பொதுவாக சிலிக்கான் மட்டும் இதை பயன்படுத்தி உருவாக்கி விற்பனையில் இருந்து வந்தது தற்பொழுது 3d பென்டிலும் கொண்டு வந்துள்ளோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top