மிகவும் எளிமையாகவும் நம்மளுடைய லேப்டாப்பில் இன்ஸ்டால் செய்வதற்கு குறைந்த அளவு file size உடைய CAD சாஃப்ட்வேர் என்றால் அது Fusion 360 தான். மற்ற CAD சாஃப்ட்வேர் அதிக Fize Size உடையதாகவும் நம்முடைய லேப்டாப்பிற்கு குறைந்த வேகம் உடையதாகவும் ஏற்படுத்தக் கூடியது. மேலும் Fusion 360 எளிதாக புரிந்து கொண்டு கற்றுக் கொள்ளலாம். இவற்றை நம் எவ்வாறு இலவசமாக டவுன்லோடு செய்வது என்று இந்த பதிவு குறிப்பிட்டுள்ளேன். இன்னும் தெளிவாக வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன். இவற்றை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நான் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து வீடியோவில் கூறியுள்ள போன்று நீங்கள் Peronal use டவுன்லோட் என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும். அவற்றில் உங்களைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கும். அவற்றை முழுமையாக மற்றும் சரியாகவும் குறிப்பிடவும்
Download:
Personal Used பயன்பாட்டில் எவற்றையெல்லாம் நம் இலவசமாக பயன்படுத்து முடியும் என்பதை கீழே உள்ள புகைப்படம் விளக்கும். நீங்கள் பணம் சம்பாதிக்க மற்றும் ஒரு நிறுவனம் நடத்துகிறீர்கள் என்றால் பணம் செலுத்தி இந்த சாப்ட்வேரை பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு தனிநபர் மற்றும் சிறிய அளவு தொழில் செய்கிறீர்கள் என்றால் இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் இலவசமாக பயன்படுத்தலாம். அவற்றில் எந்த பகுதிகள் இலவசம் மற்றும் எவையெல்லாம் பணம் செலுத்தி பயன்படுத்தனும் என்று கீழே குறிப்பிட்டுள்ளதை நீங்கள் பார்க்கலாம்
பர்சனல் யூஸ் என்ற பட்டனை கிளிக் செய்த பிறகு மூன்று படிநிலைகள் உள்ள பக்கங்களுக்கு வருவீர்கள். அவற்றில் முதலில் உங்களுடைய gmail ஐ கொடுத்து Continue என்ற பட்டனை கிளிக் செய்யவும் அடுத்து உங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் பாஸ்வேர்டுகள் சேகரிக்கும் அவற்றையும் கொடுக்கவும்.
அடுத்ததாக டவுன்லோட் பட்டன் கிடைக்கும். அவற்றை கிளிக் செய்து சிறிய அளவில் ஒரு இன்ஸ்டாலர் ஃபைல் நமக்கு கிடைக்கும் அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
How to Install Free Fusion 360 ?
அடுத்ததாக நம் இன்ஸ்டால் செய்யலாம். இன்ஸ்டால் செய்வதற்கு முன்பாக உங்களது இன்டர்நெட் அளவு 5ஜிபி அளவு உள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளவும். ஏனென்றால் இவற்றை இன்ஸ்டால் செய்வதற்கு நமக்கு நான்கு ஜிபி அளவு இன்டர்நெட் தேவைப்படுகிறது மேலும் ஏர்டெல் சிம் இன்டர்நெட் பயன்படுத்துவதை தவிர்க்கவும் ஏனெனில் Error காட்டுகிறது. இன்ஸ்டால் செய்யும்பொழுது நான் சோதித்த வரையில் ஜியோ நன்றாக உள்ளது.
Sign in: – Fusion 360 Personal Use
இன்ஸ்டால் நூறு சதவீதம் வந்துவிட்டால், Sign in என்ற பட்டன் உங்களுக்கு கிடைக்கும். அவற்றை கிளிக் செய்தால் உங்களுடைய Browser Openஆகும். அவற்றில் ஃபியூசன் 360 Signing பக்கம் கிடைக்கும். அவற்றில் நீங்கள் கொடுத்த User Name பாஸ்வேர்டை பயன்படுத்தி Sign in கொடுக்கவும் தற்பொழுது சாஃப்ட்வேரை Open செய்யலாமா? என்று பக்கம் மேலே காட்டும் அவற்றை Open செய்யலாம் என்று கொடுத்தோம் என்றால் பியூசன் 360 Openஆகும். தற்போது நீங்கள் ஏர்டெல் பயன்படுத்துவதை தவிர்க்கலாம் ஏனென்றால் கண்டிப்பாக இந்த இடத்தில் Error வருகிறது Signin செய்யும் பொழுது.
தற்பொழுது நீங்கள் Free Fusion 360 சாஃப்ட்வேர் பயன்படுத்தலாம். 3டி பிரிண்ட் பிசினஸ் செய்வதற்கு மற்றும் கல்வி கற்பிக்கும் மற்றும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இந்த பகுதி இருக்கும்.
Fusion 360 Signin Error : Solved
கீழே உள்ளது போன்று Signing செய்யும் பொழுது Error வந்தால் நீங்கள் கட்டாயமாக வேறு ஒரு நெட்வொர்க்கிற்கு மாற்றம் செய்து install and Signing செய்யவும்.
மேலே லோகோ அருகில் Autodesk Fusion Personal( Not For Commercial Use ) நாட் ஃபார் கமர்சியல் யூஸ் என்று வந்த பிறகு நம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
Fusion 360 Price Plan:
நீங்கள் பணம் செலுத்தி பயன்படுத்த விரும்பினால் மாதம் அல்லது வருடம் ஒரு முறை அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு முறை போன்ற பிளான் உள்ளது அவற்றை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.
நீங்கள் இலவசமாக டவுன்லோடு செய்தியும் பக்கத்தை நேரடியாக செல்வதற்கு கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தவும்
சீசன் 360 உங்களால் பயன்படுத்த இயலவில்லை அல்லது உங்களது கணினி மிகவும் கம்மியான அளவுகள் உடையது எனில் பிளண்டரில் நீங்கள் கேட் பிளக்கின் பயன்படுத்தி நீங்கள் பயன்படுத்தலாம் அவற்றை எவ்வாறு இன்ஸ்டால் செய்வது மற்றும் எப்படி பயன்படுத்துவது என்று வீடியோ பதிவேற்றம் செய்துள்ளேன் அவற்றை கிளிக் செய்து பார்த்து கொள்ளுங்கள் அவற்றுக்கான பதிவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனில் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும் மேலும் பல 3d பிரிண்ட் மற்றும் 3d டிசைனை பற்றி தெரிந்து கொள்ள இந்த இணையதளத்தை பயன்படுத்துவோம்
நன்றி வணக்கம்