Intro:

3D Printing Business மூலம் பணம் சம்பாதிக்கும் பல வழிகளை பற்றி கீழே கூறியுள்ளேன் அவற்றின் நீங்கள் பல வழிகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். ஏனென்று நீங்கள் ஒரு 3d print model பண்ணுகிறீர்கள் என்றால் அவற்றை design செய்ய வேண்டும். அந்த டிசைனை நீங்கள் விற்பனை செய்யலாம். அதற்கு நீங்கள் வித்யாசமான முறையில் 3d model டிசைன் செய்து இருந்தால் மேலும் அந்த டிசைனை 3d print செய்து நீங்கள் விற்கலாம்.

நீங்கள் வித்தியாசமான முறையில் 3d print model பண்ணியதை இன்ஸ்டாகிராம் reel மற்றும் youtube shorts வீடியோக்களை பதிவிட்டால் அதிக பார்வைகள் நமக்கு கிடைக்கும்.

அதை பார்த்து நமக்கு பல order கிடைக்கும். மேலும் அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி செய்து தருமாறு கேட்பார்கள். நம் அவ்வாறு மாற்றி செய்ததையும் வீடியோவாக பதிவிடலாம். மேலும் அதை 3D Design STL File நீங்கள் விற்பனை செய்யலாம்.

மேலும் ஒரு சில 3D design செய்யும் ஆரம்ப நிலையில் உள்ள Artist இதை எவ்வாறு செய்வது என்று கமெண்ட் செய்வார்கள். அப்பொழுது நீங்கள் அந்த 3D Design செய்த பற்றி tutorial உருவாக்கி அவற்றை Youtube அப்லோடு செய்வதன் மூலம் யூடியூபில் இருந்து நீங்கள் வருமானம் பெறலாம்.

இந்த Process தான் நான் கீழே தனித்தனி Category யாக கொடுத்துள்ளேன். நீங்கள் ஒஒரு வகையை மட்டும் தேர்ந்தெடுத்து கூட செய்யலாம்.

  • 3D Printing Service
  • Sell 3D Print Gifts
  • Sell 3D Design
  • Write Blog About 3D Print
  • Sell 3D Printer Parts
  • Make Video About 3D Print
  • Make Video About 3D Design
  • Training and Workshop

மேலே குறிப்பிட்டதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.

3D Printing Service:

3டி பிரிண்டிங் சர்வீஸ் மூலம் தனிநபருக்கு நீங்கள் பிரிண்ட் செய்து கொடுக்கலாம். இவை நேரம் மற்றும் பயன்படுத்தப்படும் Matterial யலின் அளவை பொறுத்து நீங்கள் விலை இருக்கலாம். இவற்றிற்கு Design செய்வதற்கான விலை தனியாக நீங்கள் நிர்ணயம் செய்யலாம். பிரிண்ட் செய்வதற்கு மட்டும் நீங்கள் மெட்டீரியல் மற்றும் காலம் நேரத்தை கணக்கிட்டு கூறலாம். ஏனெனில் ஒரு சிலர் மாணவர்கள் அவர்களது project டிசைன் செய்து வைத்திருப்பார்கள் பிரிண்ட் மட்டும் செய்தால் போதும் என்று நீனைப்பார்கள். அப்பொழுது இந்த 3d பிரிண்ட் சர்வீஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தற்பொழுது கம்பெனிகளுக்கு மட்டுமே 3D Print செய்து கொடுக்கும் பல நிறுவனங்கள் இருக்கின்றது. தனி நபர்களுக்கு குறைவாகவே 3D பிரிண்டிங் சர்வீஸ் இருக்கிறது.

Sell 3D Print Gifts:

தற்பொழுது நான் 3D Printing செய்து வரும் ஒரு பகுதி 3D பிரிண்ட் Gifts உருவாக்கி, அவற்றை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறேன். இவற்றில் ஆன்லைனில் கிடைக்கும் Design விற்பனை செய்தால் உங்களுக்கு அதிக விற்பனை ஆகாது. அதற்கு பதிலாக ஒவ்வொருவரையும் போட்டோ மற்றும் அவர்களுக்கு பெயர் கொண்டு Customize செய்து விற்பனை செய்தால் அவர்கள் விரும்பி வாங்குவார்கள். இந்த 3D பிரிண்ட் gifts கல்யாணம் மற்றும் பிறந்தநாளுக்கு கொடுப்பதற்கு மிகவும் சிறந்த பரிசாக தற்பொழுது விற்பனை ஆகிறது.

3d Print gifts making & Template Course ====> BUY NOW

தற்பொழுது அதிகமாக விற்பனையாகும் 3d gifts என்றால் Coupls Name அல்லது flip Name என்று அழைக்கப்படும் இந்த Illusion Name gift. ஒரு பக்கம் இருந்து பார்த்தால் ஒரு Name தெரியும் மற்றொரு பக்கம் இருந்து பார்த்தால் மற்றொரு பெயர் தெரியும்.

இன்னொரு போட்டோ கிப்ட் என்னவென்றால் Moon photo gifts நிலவில் அவர்கள் photo இருப்பதைப் போன்று ஒரு மாயாஜாலத்தை இந்த 3d பிரிண்ட் gifts கொடுக்கும்.

Sell 3D Design:

தனிப்பட்ட நபர்களுக்காக பிரத்தேகமாக அவர்களது பெயர் மற்றும் போட்டோ கொண்டு உருவாக்கும் பகைவ தவிர மற்ற கிப்ட் பொதுவாக பயன்படுத்தப்படும் 3D Design File நீங்கள் விற்பனை செய்யலாம். Example தஞ்சாவுா் தலையாட்டி பொம்மை இ நடிகா்களின் Miniature நான் டிசைன் செய்து விற்பனை செய்து உள்ளேன் என்னுடைய விற்பனை பக்கத்தை பார்க்க கீழே கிளிக் செய்து பார்க்கும் பார்க்கவும்.

Design Page ====> BUY NOW

தற்பொழுது வெளியிடப்படும் திரைப்படத்தின் மிகவும் பிரபலமான கேரக்டர்களை 3d டிசைன் செய்து அதன் வெளியாவதற்கு பத்து நாட்களுக்கு முன் விற்பனை செய்தால் நன்றாக விற்பனையாகும்.

Write Blog About 3D Print:

தற்பொழுது நான் இணையதளத்தில் எழுதி வெளியிடுவதைப் போன்று 3D பிரிண்டிங் பற்றி எழுதி நீங்கள் வெளியிட்டு சம்பாதிக்கலாம். இப்படி எழுதி வெளியிடுவதால் நமது இணையதள பக்கத்திற்கு கூகுள் நிறுவனத்திடம் இருந்து விளம்பரங்கள் வரும். அந்த விளம்பரங்கள் வருவதால் நமக்கு பணம் தருவார்கள் இதன் மூலம் நம்ம பணம் சம்பாதிக்கலாம். அதற்கு நல்ல தரமான கண்டன்ட்டாக நமது சொந்த முயற்சியில் எழுதப்பட்டதாக இருப்பது மிகவும் முக்கியம்.

Sell 3D Printer Parts :

உங்களுக்கு 3d பிரிண்ட் working , parts பற்றி நன்றாகத் தெரியும் என்றால் அதுக்கு தேவையான பொருள்களை விற்பனை செய்து, அவற்றில் ஏற்படும் பழுதை நீங்கள் சரி செய்யலாம். மேலும் அவர்களுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்வது அதிக லாபத்தை தருவதாக தற்பொழுது உள்ளது. மேலும் அவகளுக்கு தேவையான filament material விற்பனையிலும் நல்ல லாபம் நமக்கு கிடைக்கும்.

Make Video About 3D Print :

நீங்கள் youtube சேனலில் 3டி பிரிண்ட் பற்றி வீடியோ பதிவிடலாம். வீடியோ என்பது 3டி பிரிண்ட் எப்படி பயன்படுத்துவது மற்றும் பழுதானல் எவ்வாறு சரி செய்வது. பிரிண்ட் சரியாக வரவில்லை என்றால் இவற்றில் உள்ள பழுது என்ன என்று நீங்கள் உங்களது மொழியில் பதிவிடலாம். மேலும் இவற்றில் இருந்து எந்தெந்த 3d பிரிண்ட் பண்ணலாம். இரண்டு கலர் அல்லது மூன்று கலர் என்று எவ்வாறு பண்ணலாம் மேலும் விதவிதமான திருடி பிரிண்ட் செய்து Video போடுவதால் நமக்கு 3d print மாடல் ஆர்டர் நிறைய கிடைக்கும்.

பணக்காரன் ஆவது எப்படி? | Vadivelu comedy - YouTube

வீடியோ பதிவேற்றம் செய்தால் அவற்றில் google-யின் மூலம் விளம்பரம் வரும். அப்படி வருவதால் நமக்கு பணம் கூகுளில் இருந்து கிடைக்கும். இதன் மூலமும் நம் சம்பாதிக்கலாம்.

Make Video About 3D Design :

3d Design எவ்வாறு 3d பிரிண்ட் க்கு உருவாக்குவது என்று வீடியோ பதிவிட்டு youtube இல் பதிவேற்றம் செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் நமக்கு 3டி Design Project கிடைக்கும். மேலும் இதை நன்றாக 3d பிரிண்ட் மாடல் work ஆகிறது என்பதற்கு 3d பிரிண்ட் செய்து காண்பித்தீர்கள் என்றால் நமக்கு order கிடைக்கும்

Training and Workshop :

நீங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று இலவசமாக 3D பிரிண்டிங் பற்றி சிறு பகுதி கூறிவிட்டு, மேலும் முழுமையாக தெரிந்து கொள்ள உங்களுடைய ஆபீஸ்க்கு வந்து பணம் செலுத்தி கற்றுக் கொள்ளுமாறு செய்தால் உங்களுக்கு இவற்றின் மூலம் பணம் கிடைக்கும். அதற்கு நீங்கள் கல்லூரி பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் சிறு பகுதியை மிகவும் தெளிவாகவும் நன்றாக புரியும்படியும் சொல்லிக் கொடுக்க வேண்டும். 3d Design முதல் 3டி பிரிண்ட் செய்து முடிக்கும் வரை அனைத்தையும் நீங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும் .

நீங்கள் 3D பிரிண்ட் எவ்வாறு செய்வது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் அவற்றின் வீடியோவை இருக்கும் அவர்களைப் பார்த்தால் நன்றாக உங்களுக்கு புரியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *