வணக்கம் நண்பர்களே நம் வாரம் வாரம் ஐந்து3D பிரிண்ட் மாடல் ( 3d print Model) செய்து அவற்றை வீடியோவிற்கு பதிவிடுகிறோம். இலவச டவுன்லோட் செய்வதற்காக இந்த இணையதளத்தில் பதிவிடுகிறோம். அது போன்று இந்த வாரத்தில் நம் உருவாக்கி வீடியோ பதிவு செய்த ஐந்து 3டி பிரிண்ட் மாடல் என்னவென்று மற்றும் அவற்றிற்கான டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் மேலும் இதுபோன்று வேறு என்ன 3d பிரிண்ட் செய்து வீடியோ பதிவிடலாம் என்பதை நமது youtube கமெண்ட் பக்கத்தில் தெரிவிக்கவும்.
3D Printer name : Cr 6 se —> Creality
Filament Name : Wol3d
Type : FDM 3D Printer
3D Print Fly:
முதலில் நாம் பார்ப்பது என்னவென்றால் பச்சை நிற filament பயன்படுத்தி 3டி பிரிண்ட் பண்ணி உள்ளேன். பெரிய அளவில் இவை நமது டேபிளில் showcase போன்று பயன்படுத்திக் கொள்ளலாம் மிகவும் நன்றாக உள்ளது.
இதை பிரிண்ட் செய்வதற்கு பயன்படுத்திய செட்டிங் ( Setting ) :
Slicer : Cura
Layer Height : 0.2mm
Infill : 30%
Support: No
Adhesive : Yes
இவற்றை உருவாக்குவதற்கு சப்போர்ட் (support ) தேவை இல்லை ஏனெனில் இரு பாதியாக உள்ளதை தனித்தனியாக பிரிண்ட் செய்து நம் ஒட்டிக் கொள்ள வேண்டும். எளிதாக இவற்றை நம் பிரிண்ட் செய்து கொள்ளலாம்.
Impossible Slider:
இந்த பந்தை நாம் உருட்டிவிட்டால் மேலிருந்து கீழ் நோக்கி தான் உருள வேண்டும். ஏனென்று நமது பூமியில் கிராவிட்டி (Gravity ) உள்ளதால் எவற்றை மேலிருந்து கீழ் போட்டாலும் கீழ்நோக்கி தான் வரும். ஆனால் நீங்கள் வீடியோவில் பார்ப்பது கீழிருந்து மேல் செல்வது போன்று தோன்றும் அது உண்மைதான் நம் பார்க்கும் கோணத்தில்(View Angle ) இருந்து தான் நமது கண்களை இவை ஏமாற்றுகின்றன.
இதை பிரிண்ட் செய்வதற்கு பயன்படுத்திய செட்டிங் ( Setting ) :
Slicer : Cura
Layer Height : 0.2mm
Infill : 30%
Support: No
Adhesive : Yes
சிறிது இவற்றின் கோணத்தை (viewing Angle ) மாற்றி நமது பார்த்தால் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன். இந்த Illusion slider நீங்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்துங்கள் 3d பிரிண்ட் செய்தால் மிகவும் அருமையாக உள்ளவை ஆகும்
3d Print Mechanical Dice:
நம் தாயும் மற்றும் Ludo விளையாடும் பொழுது இரண்டு சதுர வடிவ கட்டையை உருட்டுவோம். ஆனால் நம் 3d பிரிண்டிலும் அதுபோன்று உருவாக்கலாம். சிறிது வித்தியாசமாக நாம் பயன்படுத்த வேண்டும் என்றால் இவற்றை பயன்படுத்தலாம். இவற்றை ஒரு click செய்தால் சிறிது நேரம் சுற்றிவிற்று தானாக ஒரு எண் உள்ள பக்கத்தை காற்றும். அவற்றை நம் தாயம் மற்றும் லுடோ விளையாடுவதற்கு பயன்படுத்தி க் கொள்ளலாம். இவற்றிற்கான stl file கொடுத்துள்ளேன். டவுன்லோட் செய்து 3d பிரிண்ட் செய்து கொள்ளுங்கள்.
இதை பிரிண்ட் செய்வதற்கு பயன்படுத்திய செட்டிங் ( Setting ) :
Slicer : Cura
Layer Height : 0.2mm
Infill : 30%
Support: No
Adhesive : Yes
மேலும் இவற்றை அழுத்தும் பொழுது வரும் சத்தம் மிகவும் அழகாகஉள்ளதால் இவற்றை கிளிக் செய்து நம் விளையாட தோன்றுகிறது.
Cable Tie:
கீழே படத்தில் உள்ளவாறு நம்முடைய வயர் ஆகியவற்றை எளிதில் கட்டுவதற்கும் மற்றும் அவற்றை ஆராய்ச்சி செய்வதற்கும் இந்த கேபிள் டை என்பதை நம் பயன்படுத்துவோம் இவற்றை நம் 3d பிரிண்ட் செய்ய முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்தது இணையத்தில் தேடிய போது நமக்கு இந்த டிசைன் கிடைத்தது பிரின்ட் செய்தேன் வளைக்கும் பொழுது உடைந்து விடும் என்று நினைத்தேன் அதற்காக சிறிதளவு பயன்படுத்தினால் நமக்கு இன்னும் எளிதாக இருக்கும் இல்லை என்றால் இவ்வாறு சூடு படுத்தி நம் பயன்படுத்தலாம்.
இதை பிரிண்ட் செய்வதற்கு பயன்படுத்திய செட்டிங் ( Setting ) :
Slicer : Cura
Layer Height : 0.16mm
Infill : 30%
Support: No
Adhesive : Yes
இவற்றை பயன்படுத்தும் பொழுது ஹீட் ( Heat ) செய்து பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் உடைந்து விட வாய்ப்புள்ளது. அல்லது வளைந்து கொடுக்கும் தன்மை உள்ள பிளமென்ட் ( Filament ) பயன்படுத்தலாம்.
3D Print Brush:
3d rpint பயன்படுத்தி பிரஸ் பண்ண முடியுமா? என்று நினைத்தேன் அவற்றில் உருவாக்கிய brush நம் எளிதாக பயன்படுத்த முடியாது என்று எனக்கு தெரியும். ஆனால் 3d பிரிண்ட் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. online தேடிய போது நமக்கு இணையத்தில் கிடைத்தவை இந்த மாதிரி இவற்றை இரண்டாக பிரிண்டு செய்து இடையில் cut செய்தால் நமக்கு எளிதாக Brush நமக்கு கிடைக்கும்.
இதை பிரிண்ட் செய்வதற்கு பயன்படுத்திய செட்டிங் ( Setting ) :
Slicer : Cura
Layer Height : 0.2mm
Infill : 30%
Support: No
Adhesive : Yes
இவற்றை பயன்படுத்துவதற்கு கடினமாக இருக்கும். சிறிதளவு நம்முடைய டேபிளில் வைத்துக் கொள்ளலாம். பிரஸ் முதல் கொண்டும் நாம் 3d பிரிண்ட் செய்யலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
ஓகே நண்பர்களே இந்த வாரம் நம் 3டி பிரிண்ட் செய்தவை எவை உங்களுக்கு பிடித்தது என்று கமெண்ட் செய்யுங்கள் அடுத்த வாரம் என்ன 3 டி பிரிண்ட் செய்யலாம் என்பதை யூடியூப் பக்கத்தில் தெரிவியுங்கள் மேலும் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்