Intro:

இந்தப் பதிவில் நீங்கள் Blender சாஃப்ட்வேரில் Sculpt Mode என்னும் பகுதியில் உள்ள முக்கியமான ஐந்து Brush மற்றும் Brush Setting பற்றி தெரிந்து கொள்வீர்கள். மேலும் Mask ஆப்ஷனை பயன்படுத்தும் முறை போன்றவற்றை பற்றி கூறியுள்ளேன். Brush காண செட்டிங் அனைத்தும் Brush பொருந்தும். ஆகையால் இந்த பதிவை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றில் நீங்கள் விரைவாக sculpt செய்வதற்கான sculpt பற்றியும் கூறியுள்ளேன். அவற்றை தெரிந்து கொண்டால் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய வசதிகளை எளிதாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

How To Start?

நீங்கள் Blender சாஃப்ட்வேர் ஓபன் செய்த உடன் கீழே உள்ள புகைப்படத்தில் போன்று ஆப்ஷன்ஸ் வரும். நீங்கள் நேரடியாக sculpting என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அப்படி செய்தால் நேரடியாக அதிக poly உள்ள sphere நமக்கு கிடைக்கும் ஆகையால் இந்த வசதியை கிளிக் செய்யவும்.

sculpting என்னும் option கிளிக் செய்தால் கீழே புகைப்படத்தில் உள்ளது போன்று நேரடியாக அதிக poly உள்ளவாறு நமக்கு பந்து(sphere) கிடைத்துள்ளது நீங்கள் காணலாம்

அல்லது தெரியாமல் Gneral என்னும் பட்டனை நீங்கள் press விட்டால் உங்களுக்கு cube box கிடைத்துவிடும். அவற்றை நீங்கள் sphere மாற்றுவதற்கு cube அளித்துவிட்டு add model என்னும் வசதியில் சென்று add sphere என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து sphere நீங்கள் உருவாக்க வேண்டும். அவற்றின் கொடுக்கப்பட்டுள்ள செட்டிங்ஸ் கொண்டு அதிக poly உள்ளவற்றையாக மாற்றிக் கொண்டு செல்ல வேண்டும். ஆகையால் தான் நான் உங்களை நேரடியாக sculping என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய சொல்லேன். இல்லையென்றால் நீங்கள் இந்த வசதிக்கு சென்று தான் அதிக poly உள்ள sphere பெற வேண்டும்.

அதிக resolution உள்ள பந்தை(sphere) உங்களுக்கு கிடைத்துவிட்டது என்றால் ஸ்கல்ட்டி மோட் சென்று நீங்கள் புகைப்படத்தில் உள்ளவாறு brush மற்றும் brush setting நீங்கள் அந்த பக்கத்தில் பார்க்கலாம்.

Default Brush:

நீங்கள் blender சாஃப்ட்வேரில் sculpt mode எனும் பகுதிக்கு சென்றால் சிறிதளவு மாற்றங்கள் செய்யக் கூடிய வகையில் default brush இருக்கும். இவற்றைக் கொண்டு நீங்கள் மேலே வரையலாம் ஆனால் சிறிதளவு மாற்றங்கள் மட்டுமே ஏற்படும்.

Crease Brush:

இவற்றில் நீங்கள் கட் செய்து நீக்குவது போன்று இந்த brush செயல்படும். அதாவது நமது உடம்பில் கீறல் ஏற்படுத்துவதை போன்று அந்த ஸ்பியர் பந்தில் கீறல் போன்று ஏற்படுத்தலாம். இவற்றின் அழுத்தம் மட்டும் அளவைக் கொண்டு நம் இதை பயன்படுத்தலாம்.

Clay Strip Brush:

sculpt mopde கொடுக்கப்பட்டுள்ள பந்தில் அடுக்கடுக்காக உருவத்தை கொண்டு வருவதற்கு மேலும் உருவத்தை மாற்றுவதற்கு எளிதாக இந்த பிரஸ் பயன்படுத்தலாம். இவற்றை கொண்டு வரையும் பொழுது அந்த இடத்தில் அளவைப் பொறுத்து மேலே அடுக்கிக் கொண்டே வருவது போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தலாம் அனைத்து brush களிலும் அவற்றின் அளவு மற்றும் அழுத்தம் மாற்றம் செய்வதன் மூலம் நம் வேண்டிய வடிவத்தை உருவாக்க பயன்படுகிறது.

Smooth Brush:

நீங்க தவறுதலாக ஏதாவது பிரேசில் மாற்றம் செய்து விட்டீர்கள் என்றால் Ctrl+z குடுத்து பின்பு செல்லலாம். ஆனால் நீங்கள் செய்த மாற்றம் பாதி சரி மீதி தவறு அவற்றை திரித்துக் கொள்வதற்கு smooth Brush பயன்படுகிறது. இவற்றை நமக்கு தவறான இடத்தில் அப்ளை செய்யும் பொழுது சரிசமமாக மேலும் வலுவலுப்பான தோற்றத்தை கொண்டு வருவதற்கு நம் இதை பயன்படுத்தலாம்.

Flatten Brush:

கொடுக்கப்பட்ட பந்தில் சரிசமமாக நம் ஆக்குவதற்கு இந்த பிரஸ் பயன்படுகிறது. இவற்றின் அளவு மற்றும் அழுத்தத்தை பயன்படுத்துவது மூலம் நம் வேண்டிய வடிவத்தை கொண்டு வருவதற்கு பயன்படுகிறது. எடுத்துக்காட்டிற்கு சட்டை கழுத்துப் பகுதி பட்டன் உள்ள பார்டர் பகுதி போன்றவற்றை உருவாக்குவதற்கு இவை பயன்படுகிறது. இவை வளைவாக மேடு பள்ளமாக உள்ள இடத்தை சரிசமமாக ஆக்குவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

Pinch:

edge பகுதியை கூர்மையாகவும் நேராகவும் ஆக்குவதற்கு இந்த brush பயன்படுகிறது. அனைத்து மாடல்களும் நம் வளைவாகவும் இருக்கும் அவற்றை மேலே குறிப்பிட்டது Flatten Brush பயன்படுத்தி சரிசமமாக்கலாம். இப்படி சரிசமமாக ஆக்கிய edge பகுதியை சார்பாக மாற்றுவதற்கு இந்த pinch பயன்படுகிறது. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் sharp பான மற்றும் details மாடல்ஸ் உருவாக்குவதற்கு இவை பயன்படுகிறது.

Graph:

ஒரு பாலை (sphere) இழுப்பதன் மூலம் அளவு மற்றும் அழுத்தத்தை பொறுத்து அதனுடைய வடிவத்தை இது மாற்ற பயன்படுகிறது. இந் Brush கொண்டு நீங்கள் basic கான வடிவமைப்பை கொண்டு வருவதற்கு அனைத்து sculpting சம்பந்தப்பட்ட சாப்ட்வேர்களிலும் இவை தேவைப்படுகிறது.

Brash Common Setting:

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பிரஸ் செட்டிங் அனைத்து ப்ரஸ்களுக்கும் பயன்படுத்துவோம் மற்றும் அதிகமாக பயன்படுத்தும். இவற்றை தெரிந்து கொள்ளுங்கள். இதனால் நம் விரைவாக டிசைன் செய்ய இயலும்

Radius —-> adjust Brush Size

Strenghth —-> Adjust Brush strength like thickness or pressure

+ symboll Brush extrude or cut

– symboll Brush negative or opposite property of extrude or cut

மேலே குறிப்பிட்டுள்ள இந்த பிரஸ்ட் செட்டிங் நம் அதிகமாக பயன்படுத்துவோம். ஆகையால் ரைட் கிளிக் (right Click) செய்தாலும் இந்த செட்டிங் நமக்கு கிடைக்கும். இவற்றை கண்டிப்பாக அடிக்கடி பயன்படுத்தினால் நம் விரைவில் டிசைன் செய்யலாம்

அதிகமாக பயன்படுத்தப்படும் பிரஸ் செட்டிங் மேலே எளிதாக கிளிக் செய்வதற்கு ஏற்றவாறு கொடுக்கப்பட்டிருக்கும் அல்லது ரைட் கிளிக் செய்து நீங்கள் அவற்றை பயன்படுத்தலாம்

Stroke:

இந்த Stroke வசதி நம் வரையும் டிசைன் தொடர்ந்து வரைய வேண்டுமா? அல்லது இடம்வட்டு (gap) வரைய வேண்டுமா? மேலும் கோடு நேராக உள்ள கோடு போன்று வரைய வேண்டுமா போன்ற பல வசதிகளை உள்ளடக்கியது.

இந்த ஸ்ட்ரோக் வசதி ஒவ்வொரு பிரஸ் ப்ராபர்ட்டிக் ஏற்ப மாறி இருக்கும். அவற்றை முடிந்தவரை மாற்ற வேண்டாம். மாற்றினால் உங்களுக்கு ஒரு புதுவகை பிரஸ் கிடைக்கும் என்றால் மட்டுமே இவற்றை மாற்றி அமைத்து டிசைன் செய்யுங்கள்.

Falloff:

வரையப்படும் பிரஸ் தன்மை எவ்வாறு இருக்க வேண்டும். வளைவாக இருக்க வேண்டுமா? அல்லது சதுரம் வடிவத்தில் வரைய வேண்டுமா? போன்று இன்னும் பல வடிவங்களுடன் இருப்பதைப் போன்று நம் செலக்ட் செய்து இவற்றை பயன்படுத்த வேண்டும்.

கீழே உள்ள புகைப்படம் Mask அப்ளை செய்து உள்ளது போன்று உள்ள புகைப்படம். பிரஸ் அந்த இடத்தில் மட்டும் வேலை செய்யாது. Mask இல்லாத இடத்தில் மட்டும் அந்த பிரசின் தன்மைக்கேற்ப நம்மால் draw பண்ண முடியும் , அவற்றின் அளவு மற்றும் உருவத்தை மாற்றி அமைக்க முடியும்.

மாஸ்க் பயன்படுத்தி நம் அதிக முறை டிசைன் செய்ய வேண்டியது இருக்கும். திரும்பவும் நம் வரைந்த மாஸ்க் பகுதியை நம் கொண்டு வருவதற்கு ஃபேசெட் (faceset) என்னும் ஒரு வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அவற்றைப் பற்றி நான் அடுத்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன் அல்லது கீழே அதற்கான இணைப்பு தருகிறேன் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

Remesh:

Remesh என்னும் வசதி நம் Sculpting ல் பயன்படுத்தப்படும் Sphere அல்லது வேறொரு வடிவத்தினை நம் அதிக Poly உடையதாக வைத்திருந்தால் தான் நம் வேண்டிய உருவத்தை உருவாக்க எளிதாக இருக்கும். அப்படி வைத்திருக்கும் அதிக poly உடைய Design Sphere அல்லது வேறு ஒரு வடிவம், நம் scale அல்லது அடுத்தடுத்து கிராப் டூல் (Grap Tool ) பயன்படுத்தும் பொழுது, இழுக்கும்பொழுது அதனுடைய அளவு மாறி , Low Poly என்ற நிலைக்கு மாறிக்கொண்டே இருக்கும். அவ்வாறு Low poly இருக்கும் பொழுது அந்த இடத்தில் Clay Brush அல்லது வேறு ஒரு பிரஸ் பயன்படுத்தும் பொழுது நமக்கு தேவையான வடிவத்தை பெற முடியாது. இவ்வாறு பிரச்சனை வரும் பொழுது நம் இருக்கும் உருவத்தை மாற்றி அமைக்காமலும், அதனுடைய Poly count அதிகப்படுத்த இந்த Remesh என்னும் வசதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

poly count increase & Decrease without shape changes

படத்தில் உள்ளவாறு Voxel Size என்பவற்றை குறைத்தால், நமக்கு Poly count அடர்த்தியாக மற்றும் அதிகமாகவும் கிடைக்கும். பிறகு Remesh என்ற பட்டனை அழுத்த வேண்டும்.

தற்பொழுது வடிவத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் நமக்கு அடர்த்தியான டிசைன் கிடைத்துவிடும். இவற்றை எக்ஸ்போர்ட் (Export ) செய்து பயன்படுத்தினால் எந்த ஒரு Error வராது

Mask:

Mask Setting:

Invert Mask : இந்த வசதி நம் Mask குறித்துள்ள பகுதி தவிர மற்ற பகுதியில் வேலை செய்யக்கூடாது என்றால் இந்த வசதியை நீங்கள் கிளிக் செய்தால் நம் மாஸ் செய்த பகுதி அதற்கு ஆப்போசிட்டாக (opposite) Mask செய்து நம் தற்பொழுது Mask செய்த பகுதி அன்மாஸ்க் (Unmask) ஆகிவிடும். தற்பொழுது மாஸ்கில்லாத பகுதியில் நம் மாற்றி அமைத்துக் கொள்ள மற்றும் டிசைன் draw செய்ய எளிதாக இருக்கும்.

Clear Mask: நம் மாஸ் செய்த பகுதியை நீக்க வேண்டும் என்றால் இந்த க்ளியர் மாஸ்க் (Clear Mask) என்ற பட்டனை நீங்கள் அழுத்தலாம். அல்லது அதற்கான ஷார்ட்கட் நீங்கள் பயன்படுத்தலாம்.

Mask Slice: இந்த Mask Slice இந்த வசதியை பயன்படுத்தி நீங்கள் மார்க் செய்த பகுதி மற்றும் Mask செய்யாத பகுதி தனித்தனியை ஆப்ஜெக்ட்டாக கட் (cut )செய்து கொள்ளலாம்.

Mask Extract: இந்த மாஸ்க் எக்ஸ்ட்ராக்ட் என்னும் வசதி நம் மாஸ்க் செய்யும் பகுதியை மட்டும் மாஸ்க் செய்த பகுதிகளுக்கும் மேலே Thickness உருவாக்கி மற்றொரு ஆப்ஜெக்ட்டாக நமக்கு கிடைக்கும்.

Usefull Shortcut:

கீழே குறிப்பிட்டுள்ள Shortcut நான் அதிகமாக பயன்படுத்தப்படும் ஷார்ட்கட். இன்னும் அதிகமாக இருக்கின்றது. ஆனால் தற்பொழுது நான் அதிகமாக பயன்படுத்தப்படும் ஷார்ட் கட் மட்டும் கீழே குறிப்பிட்டுள்ளேன். அவற்றை தெரிந்து நீங்கள் திரும்பத் திரும்ப பயன்படுத்துங்கள். அப்பொழுதுதான் நீங்கள் Design செய்யும் வேகம் அதிகரித்து உங்களது நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.

holding shift while using the brush –> Smooth with changes brush

holding Ctrl while using the brush –> Brush extrude or cut ( + ,_)

Right click –> brush size , strenghth, & more brush property

ctrl + I –> invert mask

Ctrl + Z –> Undo

முடிந்தால் இந்த Shortcut நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நான் அடுத்தடுத்து பதிவில் குறிப்பிடும் shortcut நீங்கள் குறித்து வைத்துக் கொண்டால் நீங்கள் பயன்படுத்தும் பொழுது எளிதாக இருக்கும்.

நண்பர்களே நான் மேலே எழுத்து வடிவில் கூறியதை, வீடியோ வடிவிலும் உள்ளது அவற்றை பார்த்து உங்களது சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளுங்கள். மேலும் உங்களுக்கு சந்தேகம் இருப்பில் கமெண்ட் செய்யுங்கள். நான் கூடிய விரைவில் உங்களுக்கு ரிப்ளை செய்து அல்லது தனியாக ஒரு பதிவை உருவாக்குவேன்.

நன்றி வணக்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top